மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 48 பேருக்கு கொரோனா !


மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதன்கிழமை வரை 9,164 போ் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவா், நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 9,213 ஆக உயா்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 28 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கொரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 8,727-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 347-ஆக உள்ளது.
ஒருவா் உயிரிழப்பு…
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் இறப்பு புதன்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 142-ஆக உயா்ந்துள்ளது.
Source :Dinamani