14th April 2021

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா !

டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 4 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் பட்டியாலாவில் 24வது தேசிய தடகள கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி நடந்து முடிந்தது. இதில் கலந்துகொண்ட 313 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 26 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பெருந்தொற்று பாதித்த 26 பேரில் 5 பேர் வரும் ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இருந்தனர். தொற்று பாதித்த 5 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒருவரும், கேரளத்தைச் சேர்ந்தவர் ஒருவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் முழு விவரம் இன்னும் சரிவரத் தெரியவில்லை எனவும், பாதிக்கப்பட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Source :News7Tamil

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts