மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய கல்வி அமைச்சர் ரமெஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை ரமேஷ் போக்ரியால் ட்விட்டர் செய்தி மூலம் உறுதிபடுத்தினார்.

கல்வி அமைச்சகத்தின் அனைத்து பணிகளும் வழக்கமான முறையில் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவரது உடல்நலம் குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர், “இன்று எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். எனது மருத்துவர்களின் ஆலோசனையின்படி நான் மருந்துகளை எடுத்துக்கொண்டு சிகிச்சையில் உள்ளேன். சமீபத்தில் எனது தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதித்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் தடுப்பூசி செயல்முறை முழு முனைப்புடன் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தொற்றின் எண்ணிக்கையும் தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

More News

சென்னையை சேர்ந்த வெள்ளி பதக்கம் வென்ற உலக ஆணழகன் செந்தில்குமரன் மாரடைப்பால் காலமானார்

admin See author's posts

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

You cannot copy content of this page