17th April 2021

கோவை அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா: இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூணன்(60). இவரின் 32 வயது மகள், 39 வயது மருமகன், 11 வயது பேத்தி ஆகியோர் உறவினர் நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை சென்று கடந்த 29ம் தேதி கோவை திரும்பினர். இதையடுத்து, எம்.எல்.ஏ., உள்பட அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், எம்.எல்.ஏ-வின் மகள், மருமகன், பேத்தி ஆகிய மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர், அவர்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எம்.எல்.ஏ., மற்றும் அவரின் மனைவி ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் மனைவி மற்றும் குடுபத்தினருக்கு நேற்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

source

ADVERTISEMENT

More News

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

தடுப்பூசி பலனை அறுவடை செய்த இஸ்ரேல்: இனி திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என அறிவிப்பு!

admin See author's posts

Leave a Reply