14th April 2021

நாகை,மயிலாடுதுறை,சீர்காழி: கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி நாகை நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் தவமணி தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். 100 நாள் வேலைத்திட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 4 மணி நேர வேலையும், முழு ஊதியமும் வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களிலும் மற்றவர்களை விட 25 சதவீதம் கூடுதல் அளவு நிவாரணம் சட்டப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் முனியாண்டி, தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மேலும் மாப்படுகை அண்ணா சிலை அருகே வட்டக்குழு உறுப்பினர் மணி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை பகுதியில் சோழம்பேட்டை, மறையூர் உள்பட 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சீர்காழியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நடராஜன், பாலு, மோகனா, குணசேகரன், தமிழ்ச்செல்வி, இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொறுப்பாளர்கள் நீலமேகம், நாகையா, நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில், கற்கோவில், எடக்குடி வடபாதி, சட்டநாதபுரம், திருப்புங்கூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

source

ADVERTISEMENT

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts

Leave a Reply