தீபாவளிக்காக வெளியூர் சென்று திரும்பியவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்: கோவை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்..!!

தீபாவளி பண்டிகை காலங்களில் வெளியூர் சென்று திரும்பி வந்தவர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுமாறு  கோவை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் சற்று குறைவாக இருக்கிறது. கடந்த மாதங்களில் நாள் ஒன்றுக்கு 500 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 150 பேர் வரை மட்டுமே பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதுஒருபுறம் இருக்க தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்காத வண்ணம் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பாக பல்வேறு காய்ச்சல் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம்கள் மூலமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் சென்று திரும்பியவர்கள் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின் அந்தந்த பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நடமாடும் முகாம்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து, வீட்டில் இருப்பவர்களுக்கும் கொரோனா அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்துக்கொள்ள ஆணையர் வலியுறுத்தியுள்ளார். எனவே மக்கள் அச்சப்படாமல் மற்றவர்களுக்கு தொற்று பரவாத வகையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது ஆணையரின் வேண்டுகோளாகும். கோவையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More News

திமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..! மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

admin See author's posts

‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…!…

admin See author's posts

தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்

admin See author's posts

Google Pay, Phonepeக்கு செக்.! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.

admin See author's posts

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

admin See author's posts

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

admin See author's posts

வாக்காளர் அட்டை இல்லையா? இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்!

admin See author's posts

பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு..! கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்

admin See author's posts