நாடு முழுவதும் 2,24,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்


இந்தியா முழுவதும் இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் தமிழ்நாடு, ஆந்திரம், அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் 447 பேருக்கு இலேசான ஒவ்வாமை ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மூன்று பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை தேவைப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.