26th November 2020

மயிலாடுதுறை சுடுகாட்டில் மரம் நடும் பணியை முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறையில் சுடுகாட்டில் நிழல் தரும் மரம் நடும் பணியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறையில் சாலைகள், தெருக்கள் ,பள்ளிக்கூடங்கள், கல்லூரி வளாகங்கள், கோவில்கள், வழிபாட்டுத்தலங்கள், குளக்கரைகள், வாய்க்கால் நீர்நிலையோரங்கள் போன்ற பல்வேறு இடங்களில் சேவை சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் சார்பில் நூற்றுக்கணக்கான நிழல்தரும் மரங்கள், செடிகள், மரக்கன்றுகள், பனைவிதைகள் நடப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக நகரத்தின் மையத்தில் உள்ள தீப்பாய்ந்தான் சுடுகாட்டில் நிழல் தரும் மரங்கள் இல்லாததால், இறுதி ஊர்வலத்தில் வருவோர் ஈம சடங்குகளை நிறைவேற்றும்வரை கடும் வெயிலில் நிற்கவேண்டிய சூழல் ஏற்படுகின்றது. அதனால் பெரும் கஷ்டம் ஏற்படுகின்றது. சுடுகாட்டில் நிழலுக்கு ஷெட் போன்ற அமைப்புக்களை ஏற்படுத்திட கூடாது என்பதால் நிழல் தரும் அகன்று விரிந்து வளரும் மரங்களை சுடுகாட்டின் மையப்பகுதியில் நட்டு வளர்ப்பதால் பயனுள்ளதாக அமையும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஜோதி அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிழல் தரக்கூடிய மரத்தினை மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் நட்டு துவக்கி வைத்தார்.

தற்போது மழைகாலம் துவங்கியுள்ளது என்பதால் நடப்படுகின்ற மரம் விரைந்து வளர்ந்து மக்களுக்கு நிழல் தரும். அதனை கருத்திற்கொண்டு சுடுகாட்டின் அனைத்து பகுதிகளிலும் மரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், அறம்செய் சிவா, கலைத்தாய் அறக்கட்டளை கிங்பைஸல் , கருணசூர்யோதயம் அமைப்பின் வினோத்,ஜோதி அறக்கட்டளை ஜோதிராஜன், இணையத்தில் இணைந்த கைகள் அமைப்பின் சீனிவாசன், பசுமைபடிகள் ஜெகமுருகன், ஏ பி ஜெ அப்துல்கலாம் அறக்கட்டளை அசோக்குமார், ஜிபிஎஸ் குருமூர்த்தி,பயர்ராஜா உள்பட பங்கேற்றார்கள்.

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts