25th November 2020

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்களை கையாளும் முறை குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் 3 பக்கங்களைக் கொண்ட இந்த அறிவுறுத்தல் கடிதத்தை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வத்துள்ளது. வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, உரிய சட்டப்பிரிவுகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விசாரணையின் போது தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்குகளை சரியான நேரத்தில் விசாரித்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய நேரத்தில் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOURCE

More News

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts