மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கிராமத்தில் பயிர் காப்பீடு நிறுவனம் சார்பில் பயிர் அறுவடை சோதனை


பிரதான் மந்திரி பாசல் பிம யோஜனா மற்றும் இஃப்கோ(iffko) டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தால் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள விவசாயி முருகாந்தனின் நிலத்தில் பயிர் அறுவடை சோதனை நடைபெற்றது. இச்சோதனை பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் மகேந்திரன், பிரவீன்குமார் மற்றும் பொறையார் வேளாண் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டாரத்தில் பயிர் அறுவடை பரிசோதனை கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் விவசாய பெருமக்கள் பயிர் காப்பீடு நிறுவனத்தாருக்கு ஆய்வு மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.