20th September 2021

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

மந்தாரக்குப்பம் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. 2-வது நிலக்கரி சுரங்கம் அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள், பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, இதுபற்றி மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு, யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர் மந்தாரக்குப்பம் அடுத்த ஐ.டி.ஐ. நகர் பகுதியை சேர்ந்த மொட்டை ராஜன் என்பவருடைய மகன் அருண் என்கிற அருண்குமார் (வயது 35) என்பதும், அவர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

மேலும் இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் அருண்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடலில் இறந்து மிதந்த திமிங்கல சுறா!

admin See author's posts

You cannot copy content of this page