20th September 2021

கடலூர்: விஷம் வைத்து மயில்களை சாகடித்த விவசாயி கைது!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (58) விவசாயி. இவர் அதேஊரில் உள்ள தனக்கு சொந்தமான வயலில் மக்காச்சோளம் பயிரிட்டு, அதனை பராமரித்து வந்தார். இந்த நிலையில் மக்காச்சோள பயிரை மயில்கள் சேதப்படுத்தியது. இதையடுத்து சந்திரன் மயில்களிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற மக்காச்சோள வயலில் குருணை மருந்தை(விஷம்) தூவியுள்ளார். இதை தின்ற ஒருபெண் மயிலும், 4 ஆண் மயில்களும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து பரிதாபமாக செத்தது.

மயில்கள் வயலில் செத்துக்கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி விருத்தாசலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் ரவி தலைமையில் வனவர் பூமிநாதன், வனக்காப்பாளர் சங்கர் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து, செத்துக்கிடந்த மயில்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக இடைசெருவாய் கால்நடைமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வனத்துறையினர் வழக்குப்பதிந்து, சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பயிர்களை சேதப்படுத்திய மயில்களை சாகடித்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page