29th November 2020

திருச்சியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, மாநகர காவல் துறை ஆகியவை இணைந்து திருச்சியில் இன்று காலை சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை நடத்தின. மிதி வண்டி ஓட்டுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இருசக்கர வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் திருச்சி மாநகராட்சியில் இருசக்கர வாகனம் செல்வதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாநகரச் சாலைகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலையின் இடது புறம் இருசக்கரவாகனம் செல்வதற்கு தனியே வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென தனியாக வர்ணம் பூசி 1.2 மீட்டர் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களிடையே மிதிவண்டி ஓட்டுவதை ஊக்கப்படுத்தவும் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் இந்த பேரணியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஆட்சியர் சிவராசு, மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சைக்கிள் ஓட்டி வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தபால் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி திருச்சி மாநகரச் சாலைகளில் முக்கிய பகுதிகள் வழியாக சென்று தென்னூர் உழவர்சந்தை வந்து நிறைவடைந்தது.

SOURCE

More News

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; டிசம்பர் .1 தென் மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்

admin See author's posts

குணம் அறிந்து கண்டித்தால் தற்கொலைகள் நடக்காது : மயிலாடுதுறையில் இருந்து அப்பர்சுந்தரம் எழுதுகிறார்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலம் தலைப்பு பாசன வாய்க்காலை தூர் வார முன்னாள் எம்.எல்.ஏ கோரிக்கை

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்

admin See author's posts

திருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா: வெளியூர் பக்தர்களுக்குத் தடை

admin See author's posts

’நிவர்’ புயலால், மயிலாடுதுறையில் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரம் சாலையில் வேருடன் சாய்ந்தது

admin See author's posts

கொள்ளிடம் அருகே, மழை நீரில் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது – நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

admin See author's posts

ஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்: கோமல் அன்பரசன்

admin See author's posts

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts