மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறையில் டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கத்தினர் டெல்லயில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர்.
சங்கத்தின் தலைவர் குருகோபிகணேசன் தலைமையில் பொதுச்செயலாளர் பன்னீர், தலைமேடு அன்பழகன், முருகன் இயற்கை விவசாயி ராம லிங்கம், துணைத்தலைவர், துணை செயலாளர் உட்பட 30 க்கும், மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து மயிலாடுதுறை கச்சேரி சாலையிலிருந்து ஊர்வலமாகச் சென்று காந்திஜி சாலையில் உள்ள முத்துவக்கீல் சாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்த பொதும் போராட்டத்தை தொடர்ந்தனர். மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்தை நீக்க வேண்டும், விவசாயிக்களுக்காக போராடிவரும் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் டெல்லியில் வெல்லட்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். டெல்லியல் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.இ.டி.யு தொழிற்சங்கத்தினர் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை முத்து வக்கீல் சாலையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சி.ஐ.டி.யு தொழில் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும் வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரியுமட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர். மாவட்ட செயலாளர் சீனு மணி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.