தென்னையை தாக்கும் ருக்கோஸ் வெள்ளை ஈ கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கம்

முன்னோடி விவசாயிகள் பங்கேற்பு !

கொள்ளிடம் வட்டாரத்தில் தென்னையை தாக்கும் ருக்கோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தீவிர முனைப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன் குளம் கிராமத்தில் தென்னையை தாக்கும் ருக்கோஸ் வெள்ளையை கட்டுப்படுத்துவது எப்படி என்பதற்கான செயல் விளக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் கலந்து கொண்டு தென்னை ஓலையில் உள்ள வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் முறையை செயல் விளக்கத்தின் மூலம் செய்து காட்டினார்.

அப்போது அவர் கூறுகையில், கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தென்னையை தாக்குகின்ற ருக்கோஸ் வெள்ளை ஈக்கள் கட்டுப்படத்துவதற்கான முனைப்பு இயக்கங்கள் நடை பெற்று வருகிறது. அனைத்து கிராமங்களிலும் வேளாண் உதவி அலுவலர்கள்., ஆத்மா திட்ட அலுவலர்கள் , பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் மற்றும் திட்ட அலுவலர்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் தென்னையில் ஈக்களை கட்டுப்படுத்தும் முனைப்பு இயக்கம் மற்றும் செயல் விளக்கம் நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட தென்னை மரத்தில் உள்ள ஓலையில் முதலில் தண்ணிரை விசைத்தெளிப்பான் மூலம் வேகமாக பீச்சி அடிக்க வேண்டும். தொடர்ந்து 30 மிலி வேப்ப என்னை கலந்து மேற்கண்ட முறையில் தென்னை ஓலையில் நன்கு படும் படியாக தெளிக்க வேண்டும் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் தண்ணீருடன் 25 கிராம் மைதா பசையை கலந்து நன்கு தென்னை ஓலைகள் மீது படும்படி தெளிக்க வேண்டும்.

மேலும் வெள்ளை ஈக்களை கவர்வதற்கு மஞ்சள் நிற பாலிதீன் தாள்களால் உருவாக்கப்பட்ட ஓட்டும் பொறிகளை ஏக்கருக்கு பத்து என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே வயலுக்கு மேல் தொங்கிவிட வேண்டும் இப்படி செய்வதன் மூலம் வெள்ளை ஈக்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி அழிக்க முடியும் என்றார். நிகழ்ச்சியில் வேளாண் உதவி அலுவலர் ஊழியர்கள் மற்றும் முன்னோடி விவாசியிகள் கலந்து கொண்டனர்.

More News

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

கமலின் கட்சி நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி…

admin See author's posts

You cannot copy content of this page