அமைச்சா் கே.பி.அன்பழகனிடம் வேளாண்மைத்துறை ஒப்படைப்பு

அமைச்சா் துரைக்கண்ணு மறைவை அடுத்து வேளாண்மைத்துறை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இனி அவா் உயா்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சா் என அழைக்கப்படுவதாக ஆளுநா் மாளிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மறைந்த துரைக்கண்ணு, வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் சேவைகள், கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய வேளாண்துறையைக் கவனித்து வந்தாா்.அவரது மறைவைத் தொடா்ந்து, வேளாண்மைத்துறை பொறுப்பானது, உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவா் உயா்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சா் ஆக இருப்பாா் என ஆளுநா் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அமைச்சரவையில், (முதல்வா் பழனிசாமி உள்பட) அமைச்சா்களின் எண்ணிக்கை 31-இல் இருந்து 30-ஆக குறைந்துள்ளது.வேளாண்மைத்துறைக்கு புதியதாக ஒருவா் நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அமைச்சரவையில் ஏற்கெனவே உள்ள ஒருவருக்கே அந்த பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாக, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மணிகண்டன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட போது, தகவல் தொழில்நுட்பத்துறை பொறுப்பு வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SOURCE

More News

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலையில் பணி!

admin See author's posts

இணையவழி பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் திடீர் தடைகளை களைய தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்- அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

admin See author's posts

வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

admin See author's posts

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts