25th February 2021

போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை

போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், மாநில எல்லைகளில் உள்ள போக்குவரத்து துறை(RTO) சோதனைச் சாவடிகளில் முறைகேடு புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் சனிக்கிழமை அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே புதுவை மாநில எல்லையில் உள்ள ஒழிந்தியாம்பட்டு (திருச்சிற்றம்பலம் கூட்ரோடு) போக்குவரத்து சோதனைச் சாவடியில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி யுவராஜ் தலைமையிலான போலீஸார் அதிகாலை தொடங்கி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கான வரி வசூல் மற்றும் ஆவணங்களை சோதனையிட்டு விசாரித்து வருகின்றனர். இந்த சோதனையின்போது தற்போது வரை ரூ. 30 ஆயிரம் அளவில் கணக்கில் வராத பணம் சிக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் முடிந்த பிறகே விவரங்கள் தெரிவிக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மாநில அளவில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

SOURCE

More News

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts

ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தின் ‘டார்க் மோட்’ வசதி

admin See author's posts

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை

admin See author's posts