28th February 2021

கோயில்களில் அனைத்து சந்நிதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தல்

கோயில்களில் அனைத்து சந்நிதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சு.பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் இந்து சமயஅறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்து 121கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ்பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான வருவாய் உள்ள சிறிய கோயில்கள் திறக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தமிழகம்முழுவதும் அனைத்து கோயில்களும் செப்.1 முதல் திறக்கப்பட்டன. இருப்பினும், கோயில்களில் பிரதான அம்பாள் மற்றும் சுவாமி அமைந்துள்ள சந்நிதிகளில் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கோயில்களில் உள்ள விநாயகர், முருகன் உள்ளிட்ட பிற சந்நிதிகளில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், பிரதான அம்பாள் மற்றும் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் கோயில்களில் இருந்து உடனடியாக வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், கோயில்களில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று செயல் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.

கோயில்களில் பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்வதற்கு பிரதான அம்பாள் மற்றும் சுவாமி அமைந்துள்ள சந்நிதிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இனி,சுற்றுப் பிரகார சந்நிதிகளுக்கு பக்தர்களை அனுமதிக்கவும், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டிநடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SOURCE

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts