தருமபுரம் கல்லூரியில் இரத்ததான முகாம்


தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் தேசிய மாணவர் படை, மயிலாடுதுறை ஹெச்.டி.எஃப்.சி வங்கி, மயிலாடுதுறை இந்திய மருத்துவக் கழகம் மற்றும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம், தருமபுரம் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் கயிலைக்குருமணி கலையரங்கத்தில் நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர். சி.சுவாமிநாதன் முகாமிற்கு தலைமை வகித்தார். தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் செயலர் முனைவர்.மா.திருநாவுக்கரசு மற்றும் மயிலாடுதுறை ஹெச்.டி.எஃப்.சி வங்கி கிளை மேலாளர் எஸ்.ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினர்.
மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை மருத்துவர் எஸ்.கோபி மற்றும் மயிலாடுதுறை இந்திய மருத்துவ கழக செயலர் மருத்துவர் ஏ.சௌமித்யபானு ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கினர். முகாமில் ஆசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் வழங்கினர்.
இதில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் என்.சிவகுமார், மயிலாடுதுறை இந்திய மருத்துவ கழக தலைவர் மருத்துவர் வீ.பாரதிதாசன், பொருளாளர் மருத்துவர் எஸ்.ரெத்தின அருண்குமார், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் திருச்சி கிளஸ்டர் தலைமை நிர்வாகி பி.சுப்ரமணியன். துணை மேலாளர் எஸ்.ராஜராஜன், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் சுய நிதிப் பிரிவு பொறுப்பாசிரியர் கோ.சௌந்தரராஜன் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் து.கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.