சீர்காழியில் மாத ஊதியம் ரூ.3 ஆயிரம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாத ஊதியம் குறைந்த பட்சம் ரூ.3ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.துணை தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் மாத உதவித் தொகை குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.தனியார் துறை வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.அரசுத் துறையில் பின்னடைவு காலிப் பணியிடங்களை கண்டறிந்து 3 மாதங்களில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
SOURCE :Dhinthanthi