24th November 2020

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவு 12 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்: வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை

தீபாவளி பண்டிகையின்போது நள்ளிரவு 12 மணிவரை கடை திறக்க அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். செங்கல்பட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 17-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். மேலும் புதிதாகச் சேர்ந்துள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் அவர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா பேசியதாவது: கரோனா நோய் தொற்றால் பாதிப்படைந்து உயிர்இழந்த வியாபாரிகளுக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும், சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளதால் தீபாவளியின்போது பொதுமக்கள், வியாபாரிகளின் நலன் கருதிஜவுளிக்கடை, பட்டாசுக் கடை, இனிப்பகம் உள்ளிட்ட கடைகளைஇரவு 12 மணி வரை வியாபாரம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசை அவர் கேட்டுக் கொண்டார்.

More News

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி

admin See author's posts

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது

admin See author's posts

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

admin See author's posts

இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்

admin See author's posts