மயிலாடுதுறை பகுதியில் சாலை மறியல் ஈடுபட்ட தி.மு.க வினர் கைது


உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க வினரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டத்தில் பிரசார பயணம் மேற்கொள்ள வந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.இதனால் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தி.மு.க வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதற்கு நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இதே போல கும்பகோணம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மூவலூர் மூர்த்தி தலைமையில் தி.மு.க வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுப்பட்ட 140 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.சாலை மறியலால் கும்பகோணம் சாலையில் 1/2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.