25th February 2021

சமஸ்கிருத திணிப்பிற்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி கடும் கண்டனம்

மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் இராம. சேயோன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் :

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தி சமஸ்கிருத திணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, அனைத்து மட்டத்திலும் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணித்து வருகிறது. சமீபத்தில் பொதிகை உள்ளிட்ட மாநில மொழி தொலைகாட்சிகளில் நாள்தோறும் சமஸ்கிருத செய்தித் தொகுப்பை ஒளிபரப்ப வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது மொழி ஆதிக்கத்தின் ஒரு அடையாளமாகும். சமஸ்கிருத மொழி செய்தியை பிற மொழி பேசும் மக்களிடம் மத்திய அரசு திணிப்பது கண்டனத்துக்குரியதாகும்.
பண்பாட்டு படையெடுப்பு இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என பாடிய முண்டாசுக் கவிஞன் பாரதியாரின் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை பிளக்கும் செயலாகும்.
15 ஆயிரத்துக்கும் குறைவான மக்களால் பேசப்படும் சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிப்பது வருத்தத்திற்குரிய செயலாகும். தொடர்ந்து பல்வேறு துறைகளில் மத்திய அரசு இந்தியையும் சமஸ்கிருதத்தையும் நுழைத்து வருகிறது. மத்திய அரசின் சமஸ்கிருதத் திணிப்பை மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. உயிரினும் மேலான கழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களும் சமஸ்கிருதத் திணிப்பை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். வருங்கால தமிழகத்தின் வரலாற்று நாயகன் மாண்புமிகு தளபதியாரின் கண்டனத்தை மத்திய அரசு கவனத்தில் உடன் எடுத்துக் கொண்டு சமஸ்கிருதத் திணிப்பை கைவிட வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற மொழி திணிப்பு வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டால் மக்களுடைய வெறுப்புக்கு ஆளாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

More News

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts

ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தின் ‘டார்க் மோட்’ வசதி

admin See author's posts

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை

admin See author's posts