சீர்காழியில் திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பிரச்சாரம் !


மயிலாடுதுறை மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை திமுக தலைவர் ஸ்டாலின் நாளை சீர்காழியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாகு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் நாளை சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட வேட்பாளருமான சீர்காழி வேட்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பூம்புகார் தொகுதி வேட்பாளர் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் மயிலாடுதுறை கூட்டணிக் கட்சி காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் அவர்களை ஆதரித்து சீர்காழியில் நாளை திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.