மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர் தின விழாவை முன்னிட்டு எம்.பி., மற்றும் எம்.எல்.ஏக்கள் மருத்துவர்களின் சேவைக்கு புகழாரம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்ட மருத்துவர் தினவிழாவில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான, நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவர்களின் சேவையைப் பாராட்டினர்.

மருத்துவத் துறையில் சேவையாற்றி, அத்துறைக்கு பெருமை சேர்த்த டாக்டர் பி.சி.ராயின் நினைவைப் போற்றும் வகையில், அவர் பிறந்த தினமான ஜூலை 1-ஆம் தேதி மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், மயிலாடுதுறை அழகுஜோதி அகாதெமி, ஜெயின் சங்கம் சார்பில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், மருத்துவர்களின் சேவையை வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மகேந்திரன், தலைமை மருத்துவர் வீரசோழன் திமுக நகர செயலாளர் குண்டா மணி என்கிற செல்வராசு செம்பை தெற்கு ஊராட்சி ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் மற்றும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page