தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!


தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா நடைபெற்றது. மயிலாடுதுறை பல் மருத்துவர் ரோட்டேரியன் ராஜசிம்மன் மையத்தைத் தொடங்கி வைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். விழாவில் கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். கல்லூரிக் குழு உறுப்பினர் வேணுகோபால் முன்னிலை வகித்தார். சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை அறிவியல் கல்லாரியின் முதல்வர் முனைவர் ராமகிருஷ்ணன், கல்லூரி செயலர் முனைவர் செல்வநாயகம் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் துணை முதல்வர் முனைவர் மகாலிங்கம், தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் முத்துலெட்சுமி மற்றும் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், 50க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.