உடல் எடையை குறைக்க சரியான டயட் உணவு முறை


எடை குறைப்பு என்று வரும் பொது அனைவரின் மனதில் தோன்றும் முதல் விஷயம் உணவு கட்டுப்பாடு தான். உடற்பயிற்சி எல்லாம் இரண்டாம் பட்சம் தான். உடல் எடையை குறைக்க கலோரிகள் குறைவாக கொண்ட டயட்டை மக்கள் பின்பற்ற ஆரம்பிக்கின்றனர். இருப்பினும் தற்போதைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க பல்வேறு விதமான டயட் முறைகள் வந்துவிட்டன. இந்தியாவில் மட்டும் முறையற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால் பல மில்லியன் மக்கள் குண்டாதல் குறைபாட்டிற்கு ஆளாகி உள்ளனர் என ஆய்வுகள் கூறுகின்றன.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லா வயது மக்களும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இளம் வயதிலேயே உடல் பருமன் காரணமாக நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் சில புற்றுநோய் பாதிப்புகளுக்கு எளிதில் ஆளாக நேரிடும். இவ்வாறு உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டு, உடல் எடை இழப்பிற்காக சரியான டயட் உணவு முறையை தேடிக்கொண்டிருக்கும் பலருக்கு இந்த ஒரு டயட் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். வெறும் வேக வைத்த முட்டை மற்றும் தக்காளியை வைத்தே நீங்கள் உங்கள் காலை சிற்றுண்டியை எளிதில் சமைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி – 4 (மீடியம் சைஸ்)
வெங்காயம் – 2 (மீடியம் சைஸ்)பூண்டு – 3 பல் (சிறிதாக நறுக்கியது)
வேகவைத்த முட்டை – 4
உப்பு -1 தேக்கரண்டி
கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை உங்களுக்கு தேவைப்படும் அளவு நறுக்கி கொள்ளுங்கள். அதேபோல வேக வைத்த முட்டையை நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு பவுல் எடுத்துக்கொண்டு அதில் வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து அதில் ஆலிவ் எண்ணெய், உப்பு, மிளகு போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
பிறகு அதனுடன் வெட்டி வைத்த முட்டையை சாலட் கலவையில் சேர்த்து கலக்கி கொள்ளவும். நீங்கள் விரும்பினால் எள் விதைகளை தூவிக் கொள்ளலாம்.
பொதுவாக வேகவைத்த முட்டைகளில் குறைவான கலோரிகள், அதிக ஊட்டச்சத்துக்கள், புரதம், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கூடும். முட்டைகளின் மஞ்சள் கரு ஆரோக்கியமற்ற கொழுப்புகளால் ஏற்றப்படுகிறது என்ற தவறான கருத்து உள்ளது.
எனவே பெரும்பாலான மக்கள் இதை வழக்கமாக தங்கள் உணவில் இருந்து நிராகரிக்கின்றனர். மஞ்சள் கருவில் உண்மையில் கொழுப்பு அதிகம் உள்ளது, ஆனால் இது டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் ஆகும்,
இவைகள் உடம்பில் கொழுப்பின் அளவை உயர்த்தாது. முட்டையில் உள்ள புரோட்டீன் தசையை உருவாக்க உதவுகிறது. மேலும், முட்டை தக்காளி சாலட் சாப்பிடுவதன் உங்கள் பசி உணர்வு கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் குறைவாக அளவிலேயே உணவினை எடுத்துக்கொள்வீர்கள். இது உங்கள் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. ஒரு வேலை நீங்கள் சைவ உணவு சாப்பிடுபவர்களாக இருந்தால் முட்டைக்கு பதிலாக நீங்கள் பன்னீர் சேர்த்து சாப்பிடலாம்.