மயிலாடுதுறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை !


மயிலாடுதுறை மாவட்டம் : குத்தாலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுன்ளன.இந்த நிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சேத்திரபலபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.வெளி மாவட்டங்கள் வெளி மாநிலத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் கார்,வேன்,பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை செய்யப்பட்டது.தேர்தல் நெருங்கும் வேளையில் பரிசு பொருட்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? எனவும் சோதனை செய்தனர்.அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.