6th December 2020

பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்பு நவம்பர் 1ல் துவக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 1 ந் தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று, அவர்களுக்கான ஒதுக்கீடு முடிந்தது. இதையடுத்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில் தகுதி பெற்ற 1 லட்சத்து 12ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். முதல் கட்ட கலந்தாய்வில் 12 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இம்மாதம் 27ஆம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறும் பொதுப்பிரிவு கலந்தாய்வு குறித்த விவரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர் சேர்க்கை பணிகள் இம்மாத இறுதிக்குள் முடித்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும் என்றும் , கல்லூரிகளை தேர்வு செய்யும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்வதற்கு நவம்பர் 16 கடைசி நாள் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இளங்கலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வில், 497 மாணவர்கள் மட்டுமே தேர்வாகி உள்ளனர். இந்த பிரிவுக்கான மொத்த இடம் 7 ஆயிரத்து 150ல் தற்போது 6 ஆயிரத்து 653 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் காலியாக உள்ள இடங்கள் பொது கலந்தாய்விற்கு கொண்டுச் செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCE

More News

விருதுநகரில் முதல்வர் பழனிசாமி உருவ பொம்மை எரித்து சாலை மறியல்

admin See author's posts

மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலத்தில் தீ விபத்து : வீட்டை இழந்த குடும்பத்துக்கு பவுன்ராஜ் நிவாரணம் மற்றும் நிதி உதவி

admin See author's posts

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் மக்களை பூம்புகார் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆறுதல்

admin See author's posts

தொடர் மழையால் மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதியில் 80 வீடுகள் இடிந்தன

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு

admin See author's posts

சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

admin See author's posts

ராமநாதபுரம் அருகே நகராமல் நிற்கும் புரெவி!

admin See author's posts

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

admin See author's posts