1st August 2021

ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

பான் கார்டு எண்ணுடன் பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் மாதம் 31ம் தேதி தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான வலைத்தளம் அதிகமானோர் பயன்படுத்தியதால், சரிவர இயங்கவில்லை என்கிற புலம்பல்களும் பொதுமக்களிடையே எழுந்தது.

இந்நிலையில், ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்ட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில், தங்களது பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முதலில் ஆன்லைனில் www.incometaxindiaefiling.gov.in என்ற வருமான வரித்துறை இணையதளத்தைத் திறக்கவும். அதன் முகப்புப்பக்கத்தில் இடது ஓரத்தில் `Link Aadhaar’ என்ற மெனுவைக் காணலாம். அந்த மெனுவைக் கிளிக் செய்யவும். அதற்கான பக்கம் திறக்கும். அதில் பான் கார்டு எண் கேட்கப்பட்டிருக்கும். உங்கள் பான் கார்டு எண்ணைப் பதியவும். அடுத்து ஆதார் எண் கேட்கப்பட்டிருக்கும். அதையும் பதியவும். அடுத்து, ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்கள் பெயரைப் பதியவும். அடுத்து ஒரு கிளிக் பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்களுடைய ஆதார் கார்டில் மட்டுமே பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த பட்டனைக் கிளிக் செய்யவும். அதார் எண்ணையும் பான் கார்டையும் இணைப்பதற்கான அனைத்து விவரங்களையும் கொடுத்தாயிற்று.

அடுத்ததாக, வழக்கம்போல் `கேப்சா கோட்’ செக்கிங் வைத்திருப்பார்கள். அதைச் சரியாகக் கொடுத்ததும் `Link Aadhaar’ பட்டனைக் கிளிக் செய்யவும். கொடுத்துள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், வெற்றிகரமாக ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கப்பட்டதாகச் செய்தி வரும்.

மொபைல் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம்:

மொபைல் எஸ்எம்எஸ் மூலம் ஆதார் எண் பான் எண் இணைக்கலாம். இதற்காக நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். சரி இதை எப்படி செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

Source :Dailyhunt

More News

மயிலாடுதுறை மாவட்டம் காசநோய் கண்டறியும் முகாமை தொடங்கி வைத்தார் நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!

Rathika S See author's posts

தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

admin See author's posts

ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!

Rathika S See author's posts

இன்று மயிலாடுதுறை மாவட்ட காவலர்களுக்கு அணிவகுப்பு நடைபெற்றது!

admin See author's posts

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது..!

admin See author's posts

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு. மாதம் ரூ.19,900 சம்பளத்தில். இந்திய அஞ்சல் துறையில் அருமையான வேலை.!!!

Rathika S See author's posts

மாவட்ட சுகாதார துறையில் மீண்டும் நேரடி வேலைவாய்ப்பு.!

Rathika S See author's posts

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை!

admin See author's posts

தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய லீவு… மிகைநேர ஊதியம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

admin See author's posts

You cannot copy content of this page