போலியாக இ பாஸ் தயார் செய்து காரில் நாகப்பட்டினம் வந்த 4 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

நாகை அருகே வாஞ்சூர் சோதனைச்சாவடியில் தேர்தல் பிரிவு தாசில்தார் விஜயகுமார் அவர்கள் கடந்த 15ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி தாசில்தார் தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர். அப்பொழுது சென்னையிலிருந்து நாகைக்கு ஒரு பெண்ணை அழைத்து வர இ-பாஸ் வாங்கியுள்ளதாக தெரிவித்தனர். சந்தேகமடைந்த தாசில்தார் காரில் இருந்த இ-பாஸ் ஐ வாங்கி தன்னிடம் உள்ள டிஜிட்டல் மிஷின் மூலம் சோதனை செய்தார். இதில் போலியான முகவரி எழுதி போலியான இ-பாஸ் தயார் செய்து காரில் ஒட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தாசில்தார் நாகூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் 16ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் நாகை அக்கரைப்பேட்டை டாட்டா நகரை சேர்ந்த பத்மநாபன்(32), சதீஷ்குமார்(35), கீச்சாங்குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்த அமுதேஷ்(34), புத்தூர் மேட்டு தெருவைச் சேர்ந்த பழனியப்பன்(40) என்பதும் இவர்கள் சொந்த வேலையாக காரில் பாண்டிச்சேரி சென்று விட்டு திரும்பியதும் தெரியவந்தது இதனையடுத்து போலீசார் அந்த நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் இது போன்று போலியாக இ பாஸ் தயாரித்து வருபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் கூறியுள்ளார்கள்.

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page