நடிகர் விவேக் வீட்டில் குவிந்த ரசிகர்கள், மக்கள்.. நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி !!

நடிகர் விவேக் மறைவு குறித்த செய்தி அறிந்ததும் அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கிற்கு உடல்நலம் மோசமானதை அடுத்து எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த அவர் இன்று அதிகாலை 4.35 மணிக்கு காலமானார். இதனால் உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, நடிகர் விவேக் சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர் வசிக்கும் பகுதியில் மக்களிடம் நன்கு நெருங்கி பழகக்கூடியவர். இயல்பாக பேசக்கூடியவர். இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருமே விவேக் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தனர். தற்போது விவேக் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி வைக்கப்பட்டதும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்த அங்கு திரண்டனர்.

அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்துமாறு கூறினார்கள்.
இதையடுத்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தபடியும், முக கவசம் அணிந்தபடியும் அவர் வசித்த தெருவில் நீண்ட வரிசையில் உள்ளனர்.ஒருவர் பின் ஒருவராக சென்று விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதே போல் விவேக்கின் ரசிகர்களும் இன்று காலையிலேயே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்டனர். அவர்களும் வரிசையில் காத்திருந்து விவேக் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இதில் ஏராளமானோர் மரக்கன்றுகளுடன் சென்றும் அஞ்சலி செலுத்தினர்.

Source: News TM

More News

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

கமலின் கட்சி நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி…

admin See author's posts

You cannot copy content of this page