14th April 2021

உரிய விலை கிடைக்காததால்பருத்தியை எரித்து விவசாயிகள் போராட்டம்

நாகை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், எருக்கூர், மாதானம், திருவெண்காடு, ஆச்சாள்புரம், கொண்டல், வள்ளுவர்குடி, அகணி, புங்கனூர், கதிராமங்கலம், எடக்குடி, வடபாதி, தென்னலக்குடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கோடை பயிராக பருத்தியை சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த பகுதிகளில் பருத்தி அறுவடை நடைபெற்று வருகிறது.அறுவடையான பருத்தியை விற்பதற்காக கடந்த வாரம் திங்கட்கிழமை சீர்காழி அருகே உள்ள எருக்கூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் கொண்டு சென்றனர். ஆனால் கடந்த வாரம் பருத்தி கொள்முதல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தனியார் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்து வருகிறார்கள். இது விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று எடக்குடி வடபாதி கிராமத்தில் சாலையில் பருத்தியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.

source

ADVERTISEMENT

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts

Leave a Reply