25th February 2021

நாகை, கொள்ளிடம் பகுதியில் நெல் கொள்முதல் நிறுத்தம் – விவசாயிகள் அவதி

நாகை, கொள்ளிடம் அருகே மாதானம் பழையபாளையம், புத்தூர், பனங்காட்டான்குடி, குன்னம், வேலூர் மகாராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இந்த கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்த நெல் மூட்டைகள் தினந்தோறும் கொள்முதல் செய்யப்படுகின்றன. விவசாயிகள் குறுவை சாகுபடி செய்த நெல் கடந்த ஒரு மாத காலமாக கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென கடந்த 4 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து 60 சதவீத நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நெல் மூட்டைகளை விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து அடுக்கி வைத்து அதனை காவல் காத்து வருகின்றனர். கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SOURCE

More News

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts