24th November 2020

நாட்டிலேயே முதல் முறையாக கேரளத்தில் விவசாயிகள் நலநிதி வாரியம்

நாட்டிலேயே முதல் முறையாக, கேரள மாநிலத்தில் விவசாயிகள் நலநிதி வாரியம் அமைக்க அந்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாநில அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கேரளத்தில் 5 சென்ட் முதல் 15 ஏக்கர் வரையிலான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், குத்தகைக்கு வேளாண்மை செய்யும் விவசாயிகள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக இணையலாம். அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயிகள் பட்டியலில் தோட்டக்கலை பயிர்கள், மருத்துவப் பயிர்கள் பயிரிடுவோர், நர்சரி வைத்திருப்பவர்களும் அடங்குவார்கள். அத்துடன், மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு, சிப்பி, பட்டுப்புழு, கோழி, வாத்து, ஆடு, முயல், கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்டிருப்பவர்களும் இந்த வாரியத்தில் சேர முடியும்.

இவர்கள் நுழைவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். அத்துடன் மாதம்தோறும் ரூ.100 வீதம் சந்தா செலுத்த வேண்டும். இந்தத் தொகையை ஆண்டுக்கு ஒரு முறையோ, 6 மாதங்களுக்கு ஒரு முறையோ கூட செலுத்தலாம். இதே அளவு தொகையை அரசும் தனது பங்களிப்பாக செலுத்தும்.

நல வாரியம் சார்பில் விவசாயிகளுக்குத் தனிநபர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ உதவி, திருமண உதவி, பேறுகால உதவி, கல்வி உதவி, இறுதிச் சடங்கு உதவித் தொகைகள் வழங்கப்படும். பெண் உறுப்பினர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் திருமண உதவித் தொகையும் வழங்கப்படும்.

SOURCE

More News

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி

admin See author's posts

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது

admin See author's posts

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

admin See author's posts

இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்

admin See author's posts