விதியே விதியே… வன்னிய சாதியை நினைத்து நொந்து கொள்ளும் பா.ம .க ராமதாஸ்..!


விதியே விதியே என்செய நினைத்தாய் வன்னிய சாதியை எனக்குரை யாயோ? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில்…
வன்னியர்களுக்கு இருபது சதவிகித இட ஒதுக்கீடு கோரி பாமக 6 கட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறது. போராட்டங்களுக்கு இடையில் அதிமுக அமைச்சர்களுடன் பாமக நிர்வாகிகள் மூன்று கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தி இருக்கிறது. ஆனால், இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அதிமுகவும், பாமகவும் அறிவிக்காமல் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், தற்போது பாமக நிறுவர் ராமதாஸ் இப்படியொரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.பேச்சுவாத்தையில் சுமுகம் ஏற்பட்டு நேற்று ராமதாஸ் முதல்வரை சந்திக்கிறார் என்று தகவல் கசிந்தது. ஆனால், இந்த சந்திப்பு நிகழவில்லை. இந்நிலையில், இந்த விரக்தியினை ராமதாஸ் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதற்கு கருத்து தெரிவித்துள்ள ஒருவர், ’’மருத்துவரே! எத்தனை காலம் இடஒதுக்கீட்டை நம்பி பொழப்பு நடத்துவது? வன்னியர்கள் அனைவரையும் கல்வி கற்றவர்களாக மாற்ற இயக்கம் துவங்குங்கள். கல்லாத வன்னியரே இல்லாத நிலை உருவாக்குங்கள். தொழில் முனைவோராய் மாற உத்வேகம் கொடுங்கள். நாளைய தமிழகத்தில் இடஒதுக்கீடு கேட்டு ஆளும் அரசுகளிடம்…’’ என தெரிவித்துள்ளார்.
Source: AsianetNews