மயிலாடுதுறை, குத்தாலத்தில் தீ விபத்து : வீட்டை இழந்த குடும்பத்துக்கு பவுன்ராஜ் நிவாரணம் மற்றும் நிதி உதவி


மயிலாடுதுறை, குத்தாலம் அடுத்து வல்லம் கிராமத்தில் தீ விபத்தால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு அதிமுக சட்டமன்ற பவுன்ராஜ் நிவாரணம் மற்றும் நிதி உதவி வழங்கினார். மின்கசிவு காரணத்தால் ஏற்பட்ட தீ விபத்தால் பைரவன் என்பவருக்கு கூரை வீடு முற்றிலும் இடிந்தது. இதனால் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்தது. இதனை அறிந்து எம்.எல்.ஏ பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, நிதியுதவியை வழங்கினார்.