இந்தியாவின் இளம் மேயர் நாட்டிலேயே முதல் முறையாக 21 வயது பெண் மேயர் ஆனார்


இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்திருக்கிரார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் முடவன் முகல் என்ற பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் ஸ்ரீலதா தம்பதியினரின் மகள் ஆர்யா. அங்குள்ள கல்லூரியில் பிஎஸ்சி மாணவி அரசியலில் ஆர்வம் தொற்றிக்கொள்ள கல்லூரியில் மாசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ -யில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவரது உழைப்பும் துரு துறுப்பான செயல்பாடுகளும் ஆர்யா ராஜேந்திரனுக்கு மாநில குழு உறுப்பினர் குழந்தைகள் அமைப்பான பால சங்கம் அமைப்பின் மாநில தலைவர் என பல்வேறு பொறுப்புகளை பரிசளித்தனர். இப்படியான சூழலில்தான் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் வந்தது. அதில் தான் வசிக்கும் முடவன் முகல் வார்டில் மாசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டார் ஆர்யா ராஜேந்திரன். இதே வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீ கலாவை விட 2,872 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஆர்யா ராஜேந்திரனின் துடிப்பான அரசியல் செயல்பாடுகளுக்கு மேலும் ஒரு அங்கீகாரத்தை அளித்திடும் விதமாக கட்சி நிர்வாகிகள் அவரை மேயராக பரிந்துரைத்து தேர்வு செய்து உள்ளனர். 21 வயதே ஆன இளம் பெண் ஒருவர் மாநகராட்சி அமைப்பின் தலைமை பொறுப்புக்கு தேர்வாகி இருப்பது நாட்டிலேயே இதுதான் முதல்முறையாகும். சாதனை படைக்க வயது ஒரு தடையல்ல என்று மீண்டும் ஒருமுறை ஆர்யா ராஜேந்திரன் நிரூபித்திருக்கிறார்.