சுதந்திரத்துக்கு பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி… காதலுக்காக பெற்றோர், அண்ணன்கள் உள்ளிட்ட 7 பேரை கொலை செய்தவர்

காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த சப்னம் என்ற பெண் இந்தியாவில் சுதந்திரத்துக்கு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளியாகியுள்ளார்.

உத்தபிரதேச மாநிலம் அம்ரோ மாவட்டத்திலுள்ள பாவன்கேடி என்ற இடத்தைச் சேர்ந்த சப்னம், அதே ஊரைச் சேர்ந்த சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், சப்னம் -சலீம் காதலை பெண் வீட்டார் ஏற்கவில்லை. சப்னம் எம்.ஏ வரை படித்து விட்டு அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்துள்ளார். நான்காம் வகுப்பு கூட தாண்டாத சலீமை அவர் காதலித்தது சப்னத்தின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து , சப்னம் தன் காதலருடன் சேர்ந்து தன் குடும்பத்தையே கொலை செய்ய துணிந்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி தன் குடும்பத்தினருக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து மயங்க செய்துள்ளார். பின்னர், தன் பெற்றோர், இரண்டு அண்ணன்கள், அவர்களின் இரு மனைவிகள் அண்ணனின் 10 மாத ஆண்குழந்தை ஆகியோரை தன் காதலருடன் சேர்ந்து சப்னம் கொலை செய்தார்.

இந்த வழக்கு அம்ரோ மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டு சப்னம் மற்றும் சலீமுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் , உச்சநீதிமன்றத்திலும் இருவரின் தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும், சப்னத்தின் கருணைமனுவையும் உத்தரபிரதேச மாநில கவர்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரும் தள்ளுபடி செய்து விட்டனர்.

தற்போது, சலீம் ஆக்ரா சிறையிலும் சப்னம் ராம்பூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரா மாவட்ட நிர்வாகம் சப்னத்தை தூக்கிலிடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் , டெத் வார்ரன்ட் வழங்கப்படும் என்று தெரிகிறது. டெத் வாரன்ட் வழங்கப்பட்டதும் மதுரா சிறைக்கு சப்னா மாற்றப்பட்டு தூக்கிலிடப்படுவார்.

நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட்ட பவான் ஜலாட்தான் சப்னத்தையும் தூக்கில் போடுகிறார். ஆனால், சப்னத்தை தூக்கிலிடப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தியாவில் மதுரா சிறையில் மட்டும்தான் பெண்களை தூக்கிலிடும் அறை உள்ளது முன்னதாக, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பல பெண் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், சப்னம் விஷயத்தில் மரண தண்டனை குறைக்கப்படவில்லை . 150 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் 1870 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் பெண்கள் சிறையில் தூக்கிலிடப்பட்டுள்ளனர். சுதந்திரத்துக்கு பிறகு, தூக்கிலிடப்படும் முதல் பெண் சப்னம் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Polimer News

More News

திமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..! மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

admin See author's posts

‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…!…

admin See author's posts

தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்

admin See author's posts

Google Pay, Phonepeக்கு செக்.! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.

admin See author's posts

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

admin See author's posts

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

admin See author's posts

வாக்காளர் அட்டை இல்லையா? இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்!

admin See author's posts

பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு..! கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்

admin See author's posts