மயிலாடுதுறை அறம்செய் அறக்கட்டளையின் நெகிழ்ச்சியான செயல்


மயிலாடுதுறை இரயில் நிலையத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பெண்மணி ஒருவர் சுற்றித் திரிவதாக தகவல் வந்த நிலையில், அறம் செய் அறக்கட்டளை உடனே நேரில் சென்று, அந்தப் பெண்மணியிடம் விசாரணை செய்ததில் அவர், ஆந்திராவை சேர்ந்தவர் என்பதும் பெயர் நல்லம்மாள் (55) என்பதும் தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவருக்கு தேவையான உணவு போர்வை, துண்டு, புடவைகள், உணவுப்பொருட்கள் வாங்கிக் கொடுத்து சட்டரீதியான அனைத்து உதவிகளையும் செய்து அவரை சீர்காழியில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்தனர். காப்பாற்றி காப்பகத்தில் சேர்க்க உதவி செய்த அறம் செய் உறுப்பினர்கள் டாக்டர் ராஜசிம்மன், மஹாவீர் ஜெயின் , ஷீலா, சதீஷ் சத்யா, மற்றும் ஹரி பாஸ்கர் , காவல் ஆய்வாளர் சிவவடிவேல் ஆகியோர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர் .