மெட்ரோ ரெயில் நிலையங்களில் கால்களால் இயக்கப்படும் ‘லிப்டுகள்’

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு மின்னணு தொழில்நுட்பங்களை ரெயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி கொரோனா பரவலை தடுக்க கைகளால் பொத்தானை அழுத்தி லிப்டுகள் இயக்கப்படுவதை தவிர்த்து, கால்களால் அழுத்தி லிப்டுகளை இயக்கும் புதிய வசதியை இதனுடைய தலைமை அலுவலகத்தில் கடந்த மே மாதம் சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டன. இதற்கு நல்ல பயன் கிடைத்ததை தொடர்ந்து 32 ரெயில் நிலையங்களிலும் உள்ள லிப்டுகளில் கால்களால் இயக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப சாதனம் பொறுத்தும் பணி நடந்து வருகிறது.

அதேபோல் ரெயில் நிலைய கழிப்பறைகளில் தண்ணீர் குழாய்களை இயக்க கைகளை பயன்படுத்தாமல் கால்கள் மூலம் இயக்கும் கருவிகள் 32 ரெயில் நிலையங்களில் உள்ள 190 கழிப்பறைகளில் நிறுவப்பட்டு உள்ளன. பயணிகளின் பாதுகாப்பை மிக கவனமுடன் உறுதி செய்யும் விதத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இந்த இரண்டு வசதிகளை நாட்டிலேயே முதன் முறையாக நிறுவி உள்ளது. மேற்கண்ட தகவலை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

SOURCE

More News

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts