26th October 2021

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

பொறையார் இச்சலடி மிஷன் தெருவில் வசிக்கும் லோகிதா ஆரோக்கியதாஸ் அவர்கள் குடிசை மாற்ற வழியில்லாமல் இருப்பதை, அப்பகுதியைச்சார்ந்த, சூவீட்ராஜ் வாயிலாக அறிந்த பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் தனது நண்பர் சுலைமான் அவர்களுடன் சென்று பார்வையிட்டு
அவர்களின் பழுதடைந்த வீட்டை, புகைப்படம் எடுத்து, முகநூலில் பதிவிட்டு தனது நண்பர்களிடம் உதவிகோரினார். அதனை அறிந்த அவரது நண்பர்கள் சுலைமான், ப.இராம்குமார், கன்சா மரைக்காயர்,செ.கலையரசன், தனசேகர், சிங்கப்பூர் நண்பர்கள் உ கிருஷ்ணன், ஆறுபாதி வீரமணி, நிர்மலாதேவிஅருண்குமார் அவர்களின் நிதி உதவியோடு பந்தல் கட்டும் பணியை ஏற்ற சுவீட்ராஜ், பிரவீன், ஆப்ரஹாம், மைக்கேல்ராஜ், தினேஷ்குமார், உத்திராபதி, ரூபன் ஒத்துழைப்போடும் 20000 ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிலை அமைத்துக்கொடுத்தார். மேலும் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களை அந்த தம்பதிக்கு வழங்கினார்.

இந்த நிகழ்வில் கன்சா மரைக்காயரின் தந்தையார் ஜனாப் K.M தர்பார் மரைக்காயர் கலந்து கொண்டு,புதிய குடிலிற்கான சாவியையும்,மளிகை பொருட்களையும் வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் உள்ளூர் பிரமுகர்களும்,பொதுதொழிலாளர் சங்க உறுப்பினர்கள் கோகுல விஷ்வா ,மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உதவியை பெற்றுக்கொண்ட தம்பதியினர் பொதுதொழிலாளர் சங்க செயல்பாட்டையும், பல உதவிகளை இக்கட்டான நேரத்தில் செய்துவரும் தரங்கை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமாரையும், அவருடைய நண்பர்களையும் மனதார பாராட்டினர்.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page