17th April 2021

கொரோனா பரவல் காரணமாக பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு!

உலக அளவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பதன் காரணமாக பிரான்ஸ் கிராண்ட் ஓபன் டென்னிஸ் தொடரானது ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் நிர்வாகம் கூறுகையில் பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரானது ஏராளமான ரசிகர்கள் மத்தியில் தான் நடக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த விளையாட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி வரும் மே மாதம் 23 ஆம் தேதி நடக்க இருந்தது. ஆனால் தற்பொழுது இந்த போட்டியானது கொரோனா பரவல் அதிகரிப்பதின் காரணமாக ஒரு வாரகாலம் அதாவது வரும் மே 31-ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் டென்னிஸ் நிர்வாக முதன்மை செயலாளர் கில்லஸ் மோரெட்டன் மார்ச் 31 ஆம் தேதியன்று பேசியதாவது,”கடந்த ஒரு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக எந்தவித சுப நிகழ்ச்சிகள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்படவில்லை. மேலும் “தகுதி சுற்றுகள்” இந்த மாத திங்கள் 24 முதல் மே 28 வெள்ளி வரை நடைபெறும், அதைத் தொடர்ந்து மே 30 ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூன் 13 ஞாயிற்றுக்கிழமை வரை முழு தொடரானது நடைபெறும்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் ரசிகர்கள் வருகையை அதிகரிக்க விளையாட்டு அரங்கமானது 30 ஏக்கர் வரை விரிவுபடுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டி நடக்கும் பட்சத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யப்படும் எனவும் டென்னிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Source:https://m.dailyhunt.in/news/india/tamil/news7+tamil-epaper-nwstam/korona+baraval+karanamaga+birans+oban+dennis+todar+othivaippu-newsid-n269257120

More News

நடிகர் விவேக்கின் மறைவு பேரதிர்ச்சி அளித்துள்ளதாக திரையுலகினர் இரங்கல்

admin See author's posts

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts