தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள்!

தமிழகத்தில் மே 1ஆம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது நான்காம் கட்டமாக மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவனம் திடீரென அதன் விலையை இருமடங்கு உயர்த்தியது. தடுப்பூசி, மாநில அரசுகளுக்கு ரூ.400 என்ற விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்ற விலையிலும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், தடுப்பூசிகளை மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதனால், மாநில அரசு, அந்த தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக தருவார்களா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 22) தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். இலவச சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

தற்போது 45 வயது முதல் 59 வரை 13 சதவிகிதமும், 60 வயதுக்கு மேல் 18 சதவிகிதமும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும்.

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கிய தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் போன்றவை தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து 100 சதவிகிதம் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க ஊக்குவிக்கப்படும். ஏற்கெனவே அறிவித்தபடி இலவசமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் வகையில் 18 முதல் 45 வயது வரை உள்ள அனைத்து கட்டடத் தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனைக் கடை வியாபாரிகள், மாநில போக்குவரத்துக்கழக ஊழியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள், அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அனைத்து ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு முன்னுரிமையில் தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

தடுப்பூசி மூலம் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை 60 சதவிகிதத்துக்கு மேல் உருவாக்குவதே முக்கிய குறிக்கோள். இந்த இலக்கை அடைந்துவிட்டால், கொரோனா பரவல் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படும்.

கொரோனா பாதிப்புள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனுக்குடன் கண்டறிந்து பரிசோதனை செய்வதால் தொற்று பரவுவதைத் தடுக்க இயலும். கொரோனா RT-PCR பரிசோதனைகள் மேலும் உயர்த்தப்படுவதால் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று விகிதம் 10% கீழ் குறைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பப்படும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ‘கோவின்’ என்ற அரசின் இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான பதிவு சனிக்கிழமை முதல் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

More News

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

கமலின் கட்சி நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி…

admin See author's posts

You cannot copy content of this page