25th February 2021

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க நிதியில்லை – மத்திய அரசு கைவிரிப்பு

நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க போதிய நிதியில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாநிலங்களைவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட பதிலில் மத்திய அரசு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மாநிலங்களையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மத்திய அரசு, “மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க தற்போது போதுமான நிதியில்லை.” எனத் தெரிவித்துள்ளது.

மேலும் ஜிஎஸ்டி வரிவசூல் குறைவாக இருப்பதால் தற்போது மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்கமுடியாது எனவும் மத்திய அரசு அந்தப் பதிலில் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக மத்திய அரசு ரூ.11 ஆயிரத்து 700 கோடி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த மாதம் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்கும் வரை மாநில அரசுகள் கடன் வாங்கிக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

SOURCE

More News

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts

ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தின் ‘டார்க் மோட்’ வசதி

admin See author's posts

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை

admin See author's posts

Leave a Reply