நாகை, கொள்ளிடம் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணியால் வயல் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

நாகை, கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூர் கிராமத்துக்கு எரிவாயு எடுத்துச்செல்வதற்காக கெயில் நிறுவனம் சார்பில் குழாய் பதிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி கிராமத்தில் வயல்களுக்கு அடியில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. குழாய் பதிக்கும் பணிக்கு தேவையான லாரி போன்ற கனரக வாகனங்கள் வயல்கள் வழியாக ஓட்டிச்செல்லப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வயலில் ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று வேட்டங்குடியில் உள்ள வயல்களில் லாரி போன்ற கனரக வாகனங்களை இறக்கி ஊழியர்கள் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக அங்கு சம்பா நெல் பயிரிடப்பட்டிருந்த வயல் பகுதி சேதம் அடைந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு திரண்டனர். இதை அறிந்த போலீசார் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் சேதம் அடைந்த வயலுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த நன்செய்-புன்செய் விவசாய சங்க மாவட்ட செயலாளர் வில்வநாதன் கூறுகையில், ‘வேட்டங்குடி பகுதியில் கெயில் நிறுவனம் சார்பில் வயல்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி காரணமாக நெல் விதைப்பு செய்த வயல் சேதம் அடைந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேதம் அடைந்த வயலை கணக்கில் கொண்டு அதற்குரிய நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

 

SOURCE

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page