மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டை பெறலாம்- விவரம் வெளியீடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 5 மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. அதன் பின்னர், பணிக்குச் செல்லும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதே போல பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் குழுவும் பரிந்துரைத்தது. இதனையடுத்து பேருந்துகளை இயக்க அரசு ஒப்புதல் அளித்ததன் பேரில் கடந்த 1 ஆம் தேதியில் இருந்து மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வரும் 7 ஆம் தேதியில் இருந்து மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதனிடையே ஊரடங்கு போடுவதற்கு முன்னர், கடந்த மார்ச் மாதம் பஸ் பாஸ் பெற்றவர்கள் அதனை வரும் 15 ஆம் தேதி வரை உபயோகித்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது.

இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டையை அந்தந்த மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களை அணுகி பாஸ் பெறலாம் என்றும் மேலும் விவரங்களுக்கு promtc123@gmail.com என்ற இணைய தள முகவரியிலும், 044-2345 5801 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOURCE

More News

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

Leave a Reply