தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை பெற விரும்புவோர் கவனத்துக்கு

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2020-ம் ஆண்டிற்கான சேர்க்கை மேற்கொள்வதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சித்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2020-ம் ஆண்டிற்கான சேர்க்கை மேற்கொள்வதற்காக விண்ணப்பங்கள் https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளம் வாயிலாக பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாளாக 15.09.2020 நிர்ணயிக்கபட்டிருந்தது. தற்போது விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி தேதி 17.09.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெற்ற மாவட்ட வாரியான கலந்தாய்வு இம்முறை தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு, மாநில அளவில் கல்லூரிகளில் நடைபெறுவதை போல இணைய வழியில் நடைபெற உள்ளது. கலந்தாய்வு தொடர்பான நிகழ்ச்சி நிரல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 18.09.2020 அன்று விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

16.09.2020 முதல் விண்ணப்பதாரர்களின் தரவரிசைக்கேற்ப அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கலந்தாய்வு தேதி அலைபேசி குறுஞ்செய்தியில் அனுப்பப்படும். 18.09.2020 மற்றும் 19.09.2020 ஆகிய நாள்களில் முன்னுரிமை விண்ணப்பதாரர்களுக்கும், 23.09.2020, 24.09.2020 மற்றும் 25.09.2020 ஆகிய நாட்களில் பொது விண்ணப்பதாரர்களுக்கும் கலந்தாய்வு நடக்கவுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் நாளில் https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள 25 தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் கலந்தாய்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 3 நாட்கள் அவகாசத்திற்குள் தங்கள் முன்னுரிமை வரிசைகளில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். கலந்தாய்வுக்குப்பின் விண்ணப்பதாரர்களின் முன்னுரிமை மற்றும் விருப்பங்களுக்கேற்ப உறுதிசெய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிலையம் / தொழிற்பிரிவுகளுக்கு தற்காலிக சேர்க்கை ஆணை வழங்கப்பட்டு ஆன்லைன் மூலமாக சேர்க்கை கட்டணம் பெறப்பட்டு சேர்க்கை உறுதி செய்யப்படும். இது தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு 9499055612 ,9499055618 என்ற அலைபேசி எண்ணிலும், onlineitiadmission@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

SOURCE

More News

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts

Leave a Reply