1st August 2021

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 472 அதிகரித்து சவரன் ஒன்று ரூ. 36 ஆயிரத்தை தாண்டியது : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை அதிகரித்தால், மறுநாள் விலை குறைவதுமான நிலையும் இருந்து வந்தது. கடந்த 17ம் தேதி ஒரு சவரன் ரூ.35,624க்கு விற்கப்பட்டது. 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை.

அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமையை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் அதிர்ச்சி தான் காத்திருந்தது. கிராமுக்கு ரூ.42 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,495க்கும், சவரனுக்கு ரூ.336 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,960க்கும் விற்கப்பட்டது.

அதே நேரத்தில் பவுன் 36 ஆயிரத்தை நெருங்கி வந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேற்று காலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது.இன்று கிராமுக்கு ரூ.59 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,506க்கும், சவரனுக்கு ரூ.472 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,048க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையின் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.73.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

More News

மயிலாடுதுறை மாவட்டம் காசநோய் கண்டறியும் முகாமை தொடங்கி வைத்தார் நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!

Rathika S See author's posts

தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

admin See author's posts

ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!

Rathika S See author's posts

இன்று மயிலாடுதுறை மாவட்ட காவலர்களுக்கு அணிவகுப்பு நடைபெற்றது!

admin See author's posts

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது..!

admin See author's posts

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு. மாதம் ரூ.19,900 சம்பளத்தில். இந்திய அஞ்சல் துறையில் அருமையான வேலை.!!!

Rathika S See author's posts

மாவட்ட சுகாதார துறையில் மீண்டும் நேரடி வேலைவாய்ப்பு.!

Rathika S See author's posts

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை!

admin See author's posts

தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய லீவு… மிகைநேர ஊதியம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

admin See author's posts

You cannot copy content of this page