14th April 2021

Google Pay, Phonepeக்கு செக்.! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலமாக பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க வங்கி பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும், பணப்பட்டுவாடாவை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் சோதனைகள் முடக்கி விடப்பட்டுள்ள நிலையில் உரிய ஆவணங்களின்றி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களை பறக்கும் படையினர் கைப்பற்றி வருகின்றனர்.

இதனிடையே கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் செயலியின் மூலம் பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க வங்கி பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் 15 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts